ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்பில் இருந்தே இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பிலும் இது தற்போது வாதவிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கப்போவதில்லை என்று கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறி வருகின்றபோதும், கட்சியின் பலர் அமைச்சு பதவிகளை ஏற்கவேண்டும் என்ற கொள்கையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments