பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
காலையில் விமான நிலையத்தின் 2F டெர்மினலுக்கு வந்த நபரொருவர் அங்கிருந்த பாதுகாவலர்களை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து அங்கு பொலிஸார் வந்ததும் அந்த நபர், சத்தம் போட்டு கத்தியவாறு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஆனால், மீண்டும் கத்தியுடன் வந்த அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டிய நிலையில், பொலிஸார் அவரை எச்சரித்துள்ளனர். எனினும் அந்த நபர் கத்தியுடன் பொலிஸாரை நோக்கி வந்ததால், பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
0 Comments