அதிகார பேராசையால் தமது கொள்கைகளைக் காட்டிக் கொடுக்கும் மனிதர்களாலேயே எமது நாடு இன்று இவ்வாறு அழிவடைந்து கொண்டிருக்கிறது. பொரளை தேவாலயத்தில் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட குண்டுகள் பாதுகாப்பு தரப்பினராலேயே அங்கு வைக்கப்பட்டது. அதன் காரணமாகவே அந்த சம்பவம் இன்று முற்றாக மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
முகத்துவாரம் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது உரையாற்றும்போதே பேராயர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,
அதிகார பேராசையால் தத்தமது கொள்கைகளைக் காட்டிக் கொடுப்பவர்கள் உள்ளமையினாலேயே நாடு இன்று இந்த நிலைமையிலுள்ளது. மக்கள் துன்பப்படுகின்றமை எமது முட்டாள் தனத்தினாலாகும் என்று எண்ணத் தோன்றுகிறது. எந்தவொரு கொள்கையுமற்ற , சட்டமுமற்ற சமூகமொன்று இன்று எம் நாட்டில் உருவாகியிருக்கிறது.
கடந்த ஜனவரி 11 ஆம் திகதி பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் எவரேனுமொருவரால் குண்டு வைக்கப்பட்டது. இதன்போது குறித்த தேவாலய ஊழியர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்துக்கும் அதிக காலம் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த குண்டு வைத்தது அவர்கள் அல்ல. பாதுகாப்பு துறையினரே அதனை செய்தனர்.
இது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. குண்டை கண்டு பிடித்தவர்களை ஒரு மாத காலம் தடுத்து வைத்திருந்து , உரிய சாட்சிகள் இல்லையெனக் கூறி பின்னர் விடுதலை செய்தனர். அவர்களை தாக்கி , பலவந்தமாக கையெழுத்து பெற்றனர். ஆனால் இதுவரையில் அவர்களுக்கான நீதி வழங்கப்படவில்லை என்றார்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்
0 Comments