Ticker

6/recent/ticker-posts

BALM உட்கொண்டதால் குழந்தை பலி! ?

 


ஏறாவூர் பொலிஸ் பிரிவு களுவங்கேணியை சேர்ந்த 02 வயதுடைய மிகவும் சுறுசுறுப்பான பெண்குழந்தையொன்று , சென்ற 20-08-2022 சனிக்கிழமையன்று திடிரென வாந்தியெடுத்து தொடர்ந்து ஆஸ்துமா நோயாளிபோல் சுவாசிக்க சிரமப்பட்டதால்   ,உடன் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து  சிகிச்சை பெற்று வந்த போது, சிகிச்சை பலனின்றி 22-08-2022 அன்று மரணமானார்.


சுகதேகியாக இருந்த இக் குழந்தைக்கு திடீரென இந்த நிலை வரக் காரணம் என்னவென விசாரித்த போது  ,சம்பவ தினமன்று குழந்தையின் தாய் தனக்கு ஏற்பட்ட கால் வலிக்காக வீட்டிலிருந்த  குறித்த களிம்பினை (BALM) பூசிவிட்டு குழந்தைக்கு அருகிலேயே அதனை வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.
திரும்பி வரும் போது குறித்த களிம்பினை குழந்தை கையில் அள்ளி விளையாடுவதை கண்டதாக தெரிவித்தாலும் அதனை உட் கொண்டாரா என தெரியவில்லையென்றும் தெரிவித்தார்.

குழந்தையின் மரண விசாரணைக்காக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் ஏறாவூர் பொலிசாருடன் இன்று (23/08)  சமூகமளித்து விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதணைக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையின் போது, குறித்த களிம்பு உட்கொண்டிருப்பற்கான சான்றுகள் காணப்பட்ட போதும், மரணம் அதன் விளைவினால் ஏற்பட்டதா என ஊர்ஜிதப்படுத்த பிரேதத்தின் உள்ளக மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும்  மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் தெரிவித்தார்.

அன்பின் பெற்றோர்களே ,

உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் முழுமையான பொறுப்பு உங்களிடமே இருக்கிறது.

வேண்டாத பொருட்கள் எதனையும் குழந்தைக்கு அருகாமையிலோ அல்லது அவர்களினால் எடுக்கக்கூடிய இடத்திலோ வைப்பதிலிருந்து தவிர்ப்போம்.

Post a Comment

0 Comments