அரகல மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளராக
செயற்பட்ட ரெட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஜா அல பிரதேசத்தில் அமைந்துள்ள ரத்திந்து சேனாரத்னவிற்கு சொந்தமான தனியார் வங்கிக் கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எனினும் அன்றைய தினம் குறித்த தொகை வைப்பிலிடப்பட்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் ரதிந்து சேனாரத்ன குறித்த தனியார் வங்கியிலும் காவல் துறையிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், ரதிந்து சேனாரத்ன தனது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தாம் இவ்வாறான பொறிகளில் சிக்குவதில்லை எனவும், தனக்கு வியாபாரம் மற்றும் கணக்கியல் தொடர்பான அறிவு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையிலேயே அவரின் வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
0 Comments