பிடபெத்தர, நில்வல கங்கையின் உடஹா நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
குறித்த இடத்தில் இன்று (26) பிற்பகல் நீராடச் சென்ற 12 பேரில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரெஸ்ஸ, போரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக மிதிகம பிரதேசத்தில் உள்ள அமைப்பு ஒன்றில் பணியாற்றிய குழுவினர், மது அருந்திவிட்டு நீராடச் சென்ற போதே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments