கந்தளாய் யூசுப்
மூதூர் பாச்சனூர் 64 ஆவது கட்டைப் பகுதியில்
அமைந்துள்ள கொட்டியாரம் ரஜமஹா விகாரையில் சிரமதான நிகழ்விற்காக சென்ற உழவு இயந்திரம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(20) இடம்பெற்றுள்ளது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தளாயில் இருந்து சேருவிலவுக்குச் சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது அதில் 21 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தோரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments