பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர், மேல் மற்றும் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப் படை, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.