Ticker

6/recent/ticker-posts

காட்டுத்தீயில் சிக்கி 26 பேர் மரணம்.. பலர் படுகாயம்...


 அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வடக்கு அல்ஜீரிய- துனிசியாவுக்கு அருகிலுள்ள எல் ட்ராப் எனும் பிரதேசத்தில் 24 பேரும் இறந்துள்ளனர். அவர்களில் 8 பேர் பொது பேருந்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது தீயில் கருகி உயிரிழந்தனர்.  மேலும், அல்ஜீரியாவுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செட்டிப் பகுதியில் இரண்டு பேர் இறந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கமெல் பெல்ட்ஜவுட் தெரிவித்தார். 


Post a Comment

0 Comments