Ticker

6/recent/ticker-posts

2024 இல் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில்..?

 


எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மஹிந்த ராஜபக்ஷவை கட்சியின் தலைவராகவும் நாமல் ராஜபக்சவை கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெசில் ராஜபக்ஷவுக்கும், கோட்டாபாய ராஜபக்ஷவுக்கும் இம்முறை எவ்விதமான பதவிகளும் வழங்கப்படமாட்டாது என கூறப்படுகிறது.


மேலும், சர்வகட்சி அரசில் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளாமல், பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் நாமல் தற்போது அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு நாமல் இவற்றையெல்லாம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

நாமல் ஏற்கனவே தனது ஜனாதிபதி கனவை நனவாக்க மற்றொரு மாபெரும் யுக்தியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2024இல் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் களமிறக்குவது குறித்தும் பொதுஜன பெரமுனவுக்குள் குரல்கள் ஒலித்து வருவதாக கூறப்படுகிறது

Post a Comment

0 Comments