ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் உரியவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களிலோ அல்லது வாட்ஸ்அப் ஊடாகவோ தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி எண்கள் – 0112 083 049
– 1997
0 Comments