Ticker

6/recent/ticker-posts

1975 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகள் மீண்டும் நிகழலாம் - பங்களாதேஷ் பிரதமர் எச்சரிக்கை

 


அடுத்த பொதுத் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், ஆகஸ்ட் 15, 1975 படுகொலைகள் மீண்டும் நிகழக்கூடிய சாத்தியம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நாட்டு மக்களை எச்சரித்துள்ளார்.

ஆகஸ்ட் 15, 1975 இல், ஷேக் முஜிபுர் ரஹ்மான், பங்களாதேஷின் முதல் ஜனாதிபதியான பங்கபந்து என்று பரவலாக அறியப்பட்டவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அவாமி லீக் அரசாங்கம் பங்களாதேஷில் பதவிழந்தது. எனவே நாட்டின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று பிரதமர் ஹசீனா கூறினார்.

இன்னும் தாக்குதல்கள் வரலாம். 1975 ஆகஸ்ட் 15 தாக்குதல், பங்கபந்து நாட்டின் வளர்ச்சியை ஆரம்பித்த நிலையில், இன்று பங்களதேஷ் வளரும் நாடாக மாறியுள்ளது. இதை விரும்பாதவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் தாக்குவார்கள்.  எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு  என்று பிரதமர் மேலும் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடந்த பயங்கரமான கையெறி குண்டுத் தாக்குதலின் 18 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நிகழ்வுகள் நேற்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பங்கபந்து சதுக்கத்தில் எதிர்ப்புப் பேரணியின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  இந்த நிகழ்வு நாட்டையே அதிர வைத்தது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி கையெறி குண்டுத் தாக்குதல் மற்றும் ஆகஸ்ட் 15 படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நிகழ்வின்  தொடக்கத்தில், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி அரசாங்கத்தின் நேரடி அனுசரணையின் கீழ் 2004 ஆம் ஆண்டு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பிரதமர் ஹசீனா குற்றம் சாட்டினார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 22 அவாமி லீக் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் காயமடைந்தமையையும் சுட்டிக்காட்டினார்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments