14 வயது சிறுமியை கடத்திச்சென்ற சிறுமியின் காதலன் மற்றும் பிறிதொரு நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஓகஸ்ட் 03 ஆம் திகதி மைனர் சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பில் லுணுகல பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, லுனுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகிருவ வனப் பகுதியில் நேற்று (11) விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது லுனுகல மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடைய இருவரினால் சுமார் 8 நாட்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை மீட்டுள்ளனர்.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டனர். இடைப்பட்ட இருவரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments