பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது.


அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் இனங்காணப்பட்டுள்ளார்.

77 வயதான ஆங் சான் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.