அண்டை நாடான பாகிஸ்தானில், தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
கனமழை மற்றும் வெள்ளத்துக்கு நாடு முழுவதும் சுமார் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே போல் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 113 பேருக்கு பலத்த காயங்களும், 1,456 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மழை, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அரசு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது
0 Comments