அரகலய’ எனப்படும் மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் பிரபலமான ‘யூடியூபரு’மான ‘ரட்டா’ என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன, தனது வங்கிக் கணக்கில் 05 மில்லியன் (50 லட்சம்) ரூபா பணம் – அறியப்படாத நபர்களால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



கோரப்படாத இந்தப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரட்டா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றின் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் – இவர் கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6