கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தையும் உடைத்துக்கொண்டு உள்நுழைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னதாக, ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து தற்போது செயலகமும் ஆர்ப்பாட்டக்காரர்களின் வசமாகியுள்ளது.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புத் தரப்பினர் திணறி வருகிறது.
இதேவேளை, இன்றைய சம்பவங்களில் காயமடைந்த 33 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments