துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் ,இன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் அபே உரையாற்றிக் கொண்டிருந்த போதே, குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இந்நிலையில், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் உயிரழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.