Ticker

6/recent/ticker-posts

சக்திவாய்ந்த ஒலி தொழில்நுட்பம், Ultra Slim Frame உடன் Neo QLED 8K தொலைக்காட்சிSamsung Electronics அதன் Neo QLED 8K வரிசையின் ஒலி அமைப்பை செம்மைப்படுத்தி இருப்பதால் பயனர்கள் தங்கள் பெரிய TVயின் audio தரத்தை முழுமையாக அனுபவிக்கலாம். இதன் Flagship displayக்கள் அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் அளவு மற்றும் ஒலியை அளவீடு செய்வதற்காக அவை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதை பகுப்பாய்வு செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் object-tracking sound 8 speakerகள் யதார்த்தமான ஒலியை வெளியேற்ற அந்த தகவல்களை பயன்படுத்துகின்றன.

ஒலி அமைப்புகளை மேம்படுத்த Spacefit தினசரி இடப்பகுப்பாய்வு செய்கிறது

இன்று அதிகமான பயனர்கள் நாளின் பல்வேறு நேரங்களில் தாங்கள் இருக்கும் இடங்களான living roomகள், படுக்கையறைகள், மொட்டைமாடிகள் என பல இடங்களில் உட்கார்ந்தும் படுத்துக் கொண்டும் TV பார்க்கும் பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். அதிகமான பயனர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலின் அடிப்படையில் பார்வை அனுபவத்தை தனிப்பயனாக்குகின்றனர். இதனை கருத்தில் கொண்டு developers தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர். இது பயனர்கள் பார்க்கும் சூழல்களை தானாகப் பகுப்பாய்வு செய்து எப்போதும் சிறந்த ஒலியை அனுபவிப்பதை உறுதி செய்கிறது. இதன் விளைவாக SpaceFit ஒரு நாளுக்கு ஒருமுறை நீங்கள் வாழும் இடத்தில் ஏற்படும் மாற்றங்களை தானாக சரிபார்த்து அதற்கேற்ப ஒலி அமைப்புகளை அளவீடும் செய்யும்.

எண்ணற்ற தரவு மற்றும் A1 தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட புத்தாக்க கண்டுப்பிடிப்புகளால் இத்தொழில்நுட்பம் சாத்தியமானது.ஒலியை உறிஞ்சும் பகுதிகளிலிருந்து dead rooms என குறிப்பிடப்படுவது போன்ற ஒலி பிரதிபலிப்பு இடைவெளிகள் ஆகிய இரண்டு காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

OTS pro திரையின் அனைத்து மூலைகளிலிருந்தும் 3D ஒலியை உருவாக்க எட்டு speakerகளை பயன்படுத்துகிறது
பரந்த அளவிலான ஒலி channelகள் காணப்படுவதால் அவற்றை பயனர்கள் இரசிக்கும் வழிகளும் மாறிவருகின்றன. வீட்டு பொழுதுபோக்கு விரிவடைந்து பலர் ஒன்றாக பரந்த திரையில் திரைப்படங்களையும் மற்றைய அம்சங்களையும் அனுபவிப்பது பொதுவாகி வருகிறது. முக்கியமாக ‘Sweet spot’ஐ விரிவுப்படுத்தி பயனர்கள் திரையின் வெளிப்புற விளிம்புகளில் சிறந்த ஒலியை அனுபவிக்கக்கூடிய இடமாக உள்ளது.

Object Tracking Sound (OTS) தொழில்நுட்பம் TVயில் multi-channel speakerகளை பயன்படுத்தி திரையில் உள்ள பொருட்களின் இயக்கத்தை கண்காணிக்கும் அம்சமாகும். இது பயனர்களின் மகிழ்ச்சியை இன்னும் ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கிறது. Neo QLED 8K ஆனது தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான OTS proஐ உள்ளடக்கியது.இது முந்தைய modelகள் போல 6 speakerகள் அமைப்பில் இரண்டு center speakerளாக 8 speakerகளை கொண்டுள்ளது.

ஒரு பொருள் திரையில் நகரும் போது அதன் இயக்கத்திற்கு இசைவாக ஒலியை உருவாக்குகிறது. இதன் அதிவேக ஒலி அமைப்பு இடது மற்றும் வலது stereo அனுபவத்தையும் 3D விளைவுகளையும் மேம்படுத்துகிறது. இது பயனர்கள் அதன் நடுவில் நிற்பது போன்ற சிறந்த உணர்வை ஏற்படுத்துவதுடன் சிறந்த பார்வை அனுபவத்தையும் கொடுக்கிறது.

Ultra-Slim வடிவமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்துதல்


Samsung இன் TV வடிவமைப்பில் தனித்துவமான அம்சமான Infinity Screen, bezelகள் கண்ணுக்கு தெரியாதாக்குவதன் மூலம் அதனை அனுபவிப்பதை அதிகரிக்கிறது. இது developerகளுக்கு ஒரு தனித்துவமான சவாலாக உள்ளது. சாதனத்தின் மெலிதான வடிவத்தில் எவ்வாறு பல speakerகளை சிறந்த முறையில் உள்வாங்குவதை ஆராய வேண்டும்.

இது Neo QLED TVகளில் புத்தாக்கமாகும். Out-of-the-box வடிவமைப்புகளில் ஒன்றாகும். Panelகள் மெல்லியதாக மாறுவதற்கு இடமளிக்க அடிப்படை செயல்பாடுகளை வழங்க பயன்படுத்தப்படும் கூறுகளுக்கு புதிய வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

மிகச்சிறந்த யதார்த்தமான ஒலியை வழங்கல்


சிறந்த ஒலி செயல்திறனை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பயனர்கள் அனுபவிக்கும் அம்சங்களை பற்றிய ஆழமான புரிதலைப் பெற developerகள் அதிகம் முயற்சி எடுத்துள்ளனர். உதாரணத்திற்கு விளையாட்டுப் போட்டிகளை பகுப்பாய்வு செய்யும்போது அந்த கூட்டத்தின் ஒலியை மீண்டும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். அதேநேரம் இசைக்காக ஒரு நிலையான ஒலியை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். திரைப்படங்களை பொருத்தவரை திரையின் மையத்திலிருந்து உரையாடல் வருவதை உறுதி செய்ய நிலையான பகுப்பாய்வுகளை மேற்கொள்கின்றனர்.

Samsung TVகள் கடந்த 16 வருடங்களாக உலகளாவிய சந்தையை வழிநடத்தி வருகின்றன.இதில் இதுவரையாக நிறுவனம் திரட்டிய பயனர் தரவுகள் விலைமதிப்பற்ற சொத்தாகும். உலகெங்கும் உள்ள எண்ணற்ற குடும்பங்கள் Samsung TVகள் பயன்படுத்துவதால் நிறுவனத்தின் displayகள் எங்கும் நிறைந்திருப்பது அடுத்து என்ன என்பதை சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தொடர்ந்து வயர்ச்சியடைந்து வரும் உள்ளடக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக developerகள் Samsung TVகளை முடிந்தவரை யதார்த்ததிற்கு நெருக்கமான ஒலி அனுபவத்தை வழங்க உதவுவதில் உறுதியாக உள்ளனர்.

திரைகள் பெரிதாகவும் வடிவமைப்பு மெலிந்தும் உள்ளடக்கங்கள் மாறுபட்டும் வருகின்றன. தற்போதைய trendஉடன் விடயங்கள் செய்வது speaker channelsகளை அதிகரிப்பது மற்றும் channelகள் ஒன்றையொன்று சிறப்பாக ஒத்துப்போக அனுமதிக்க A1 தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது யதார்த்தமான ஒலியை வழங்குவதற்கு நம்மை நெருக்கமாகக் கொண்டுவரும். இது இறுதியில் ஒலி அமைப்புகளை சரிசெய்ய remote controlஐ பயன்படுத்தாத சகாப்தத்திற்கு கொண்டு செல்லலாம்.

Samsung Neo QLED 8K TV களை அங்கீகரிக்கப்பட்ட பங்காளர்களான Softlogic, Singer, Singhagiri. Damro மற்றும் Samsung E-Storeஇல் பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments