Ticker

6/recent/ticker-posts

G.L. பீரிஸ் தவிர முன்னதாக இருந்த அனைவருக்கும் அமைச்சு பதவிகள்!!

 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ், புதிய பிரதமர்தலைமையில் பழைய அமைச்சரவையின்

ஒருவரை தவிர ஏனையோர் மீண்டும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

முந்தைய அமைச்சரவையில் அங்கம் வகித்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ், அக்கட்சியின் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.

கடந்த 20ஆம் திகதியன்று பாராளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவின்போது, தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் டளஸ் அழப்பெருமவை வேட்பாளராக ஜீ.எல் பீரிஸ் முன்மொழிந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அப்போதைய ஜனாதிபதி வேட்பாயரான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தது. எனினும் ஜனாதிபதி தேர்தலில், ஜீ.எல்.பீரிஸ் முன்மொழிந்த டளஸ் அழகப்பெரும தோல்வியடைந்த நிலையில், கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டதாக கூறி ஜி.எல் பீரிஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.


இந்த குற்றச்சாட்டுக்கு மத்தியிலேயே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் முன்னைய அமைச்சரவையில் வகித்து வந்த வெளிவிவகாரத்துறை அமைச்சுப் பதவி அலி சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments