Ticker

6/recent/ticker-posts

சிபெட்கோ தீர்மானத்தால் எரிபொருளுக்கு சிக்கல்....

 


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) நாளாந்த எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தின் விளைவாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் பௌசர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.


இலங்கை தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களை உரிய நேரத்தில் வழங்குவது குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளாந்தம் 3,000 மெற்றிக்தொன் பெற்றோல் மற்றும் 4,000 மெற்றிக்தொன் டீசலை விநியோகிப்பதற்கு கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகவும் அனைத்து நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் கிடைக்குமா என்ற கவலை நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம், 22 நாட்களுக்கு போதுமான பெற்றோலும் இருப்பில் உள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments