எரிபொருள் விலையினை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டென் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் இந்த எரிபொருள் விலைத்திருத்தம் அமுலாகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
0 Comments