அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஜூலை 25 திகதி திங்கட்கிழமை குறித்த பாடசாலைகள் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளை கருதிற்கொண்டு கல்வியமைச்சின் தீர்மானத்துக்கமைய, விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
0 Comments