நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மூவர் போட்டியிடுவதற்கானவேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில் வேட்புமனு தாக்கல் இடம்பெற்றது. இதில்ஜனாதிபதி பதவிக்கு டலஸ் அழகப்பெரும, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமாரதிஸாநாயக்க ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், டலஸ் அழகப்பெரும வின் பெயரை சஜித் பிரேமதாச முன்மொழிய, மொட்டு கட்சிஎம்.பி ஜீ.எல்.பீரிஸ் அதை வழிமொழிந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுச நாணயக்காரஅதை வழிமொழிந்தார்.
அதே போல அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் முன்மொழிய ஹரிணிஅமரசூரிய வழிமொழிந்தார். ஆக இம் மூவரில் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கானவாக்கெடுப்பு நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
0 Comments