நாட்டுக்கே விமோசனம் கிடைத்தாலும் நமது கல்முனை மண்ணிற்கு ஒரு போதும் விமோசனம் கிடைக்கவே கிடைக்காது..!!

ஏன் தெரியுமா.....?

கல்முனை என்று பெயரில் மாத்திரம் கெத்து காட்டி பெருமை அடிச்சு பீத்தி திரிவதில் மாத்திரம் மோட்சமோ விமோசனமோ மக்களுக்கு ஒரு போதும் கிடைத்துவிட போவதில்லை கிடைத்தும் விடாது.

ஏனெனில், நமக்குள் ஒற்றுமையில்லை. 

நாம் ஒற்றுமைப் படாதவரை அனைத்துமே மாறினாலும் நமது ஊரின் நிலையும் தலையெழுத்தும் மாறவே மாறாது.

கல்முனையை பொறுத்தவரை சாகிரா கல்லூரி வீதி தொடங்கி தாளவட்டுவான் சந்திவரை உள்ள நிலப்பரப்பில் பல்லினங்கள் சேர்ந்து வாழ்ந்தாலும் நமது அடிப்படை தேவைகளை நிபர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு வக்கற்றுப் போய் உள்ளோம் என்பது பெரும் கவலை.

கல்வி, கலாச்சாரம், அபிவிருத்தி என்று பல துறைகளிலும் பின்னகர்ந்து போதைவஸ்து, வட்டி, குடி கும்மாளம் என்று முன்னோக்கி நமது ஊர் பயணிப்பதை அறிந்து கொள்ள முடியாத வக்கற்ற நிலையிலா நாம் உள்ளோம்.




எல்லாவற்றிலும் பின்னடைவு 

அதிலும் குறிப்பாக எமது முஸ்லிம் பிரதேசத்தில், 


பலசங்கங்கள், சிவில் அமைப்புகள், அதிலும் பெயர் குறிப்பிட்டு 

சொல்லப்போனால்

நகர் வர்த்தக சங்கம்

மார்கட் வர்த்தக சங்கம்

ஆழ்கடல் மீன் பிடிப்போர் சங்கம்

கரைவலை மீனவர் சங்கம்

கல்முனை மார்கட் ஆட்டோ சங்கங்கள்

ஏன்

அனைத்துப் பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்கள் சம்மேளனம்

பல உலமா சபைகள்

அந்த சங்கம் இந்த சங்கம் அந்த அமைப்பு இந்த அமைப்பு என்று பல நூறு அமைப்புகளும் அதற்கான ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களும்

பாராளுமன்ற உறுப்பினர் தொடங்கி மாநகர சபை உறுப்பினர்கள் அதிகாரம் பொருந்தியோர் பலரும் 

இருந்து என்ன பலன்..?

இதுவரையில் ஏதாவது முன்னேற்றம் அல்லது தீர்வுகள் கிடைத்துள்ளதா அல்லது முறையான கட்டமைப்புகள் ஊரில் ஏற்படுத்தப் பட்டுள்ளதா...? நிச்சயமாக இல்லை.

இன்றைய தேதியில்

மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் எரிபொருள் விநியோகத்தை கூட சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய முடியா அளவிற்கு வக்கத்துப் போய் அல்லவா நிற்கின்றோம்.

ஊருக்குள் 4 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தும் அதற்கான முகாமைத்துவ முறைகள் இன்றி மக்கள் படும் சீரழிவுகள், சொல்லொண்ணா துயரங்கள் படைத்த ரப்பு மாத்திரமே நன்கறிவான்.

பெட்ரோல், டீசல் தொடங்கி மண்ணெண்ணெய் வரை அத்தனையும் தட்டுப்பாடு மற்றும் முறையற்ற விநியோகமுறைமை.

எமது ஊரின் ஏழை மக்கள் மண்ணெண்ணைக்காக சுட்டெரிக்கும் வெயிலில் கால்கடுக்க விழிபிதுங்கி நின்றதை அத்தனை சுலபத்தில் மறந்துவிட  முடியுமா..?

தற்பொழுது எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை என்று நீங்கள் பசப்பு வார்த்தைகள் பல சொல்லலாம், 

அது எமது கல்முனை மக்களுக்கு தீர்வை ஒருபோதும் தந்திராது.

கொஞ்சம் பொறுங்கள்...!!

குப்பை கூழங்களை அகற்ற எரிபொருள் இல்லையென்று ஊரே நாற்றமெடுக்கும் நிலை  இன்றோ அல்லது நாளையோ வரலாம்.

எரிபொருள் இல்லை என்று வைத்திய சாலைகளுக்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு மகப்பேறு தொடங்கி பல நோயாளிகள் வீடுகளில் தேங்கி இருப்பதை அவதானிக்க முடியும்.

இப்படி பல துர்பாக்கியமான நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாளும் அரங்கேறும் விரைவில் எமது மண்ணில்...!

எமது ஊரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வரும் பொழுது எமது ஊர் மக்களுக்கு உரிய முறையில் விநியோகிப் பதற்கான ஏதுவான வழிமுறைகள் உள்ளனவா .?

நிச்சயமாக இதுவரையில் இல்லை என்பதே பெரும் கவலை.

மக்களை மடயர்களாக, மந்தைகளாக நினைத்து பதவி, அதிகாரத்தில் உள்ள உங்களது சுய தேவைகள் நிறைவேறியவுடன் ஊரைப் பற்றிய பாமர மக்களைப் பற்றிய எண்ணம் சிந்தனைகள் அறவே மறந்துபோய் இருப்பது கேவலத்திலும் கேவலம் அல்லவா..?

இத்தனைக்கும் யார் பொறுப்பு கூறுவது...?

எமது கல்முனை மண் இவ்வளவு மோசமாக கேட்கப் பார்க்க நாதியில்லாமல் சீரழிந்து சின்னாபின்னமாகி  போயிருப்பதற்கு யார் காரணகர்த்தாவக இருக்க முடியும்....?

அரசியலா ..? அதிகாரமா..?

இல்லை

கவனயீனமா..?

சற்று சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு உங்களது புத்தி பேதலித்துள்ளதா..?

எமது நாடே கயவர்கள் கூட்டாத்திடம் இருந்து விடுதலை பெற்று விமோசனம் கிடைக்கும் தருவாயில் ஏன் எமது கல்முனை மண்ணிற்கு மாத்திரம் விமோசனம் கிடைக்காமல் உள்ளது.


இது தொடருமாக இருந்தால் மக்களின் சாபம் சம்பந்தப்பட்டோரை சுட்டெரிக்கும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

அத்தனை பேரும் இன்று இல்லாவிட்டாலும் மறுமையில் கல்முனை மக்களுக்கு பதில் கூறவேண்டிய கடமைப்பாடு உள்ளது

இது பதவியும் அதிகாரமும் அல்ல  அத்தனையும் மக்களின் அமானிதம்.


ஊரை நிருவகிக்க கூடிய ஒழுங்கான பள்ளிவாசல்கள் சார்ந்த கட்டமைப்புகள் உருவாகாதவரை இன்னும் இன்னும் எத்தனை எத்தனை சீரழிவுகளை எமது மண்ணும் மக்களும் அனுபவிக்க போகின்றனரோ வல்ல இறைவன்தான் நன்கறிவான்.


இது ஒன்றும்,

குறைகூருவதற்கல்ல,


சின்தனைக்கான பதிவு மாத்திரமே....!!

Mohamed Kamil