தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2 மின் பிறப்பாக்கிகளுக்கும், 4 நாட்களுக்கு மாத்திரமே உலை எண்ணெய் போதமானதாக உள்ளது.
அத்துடன், மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையத்துக்கு 2 நாட்களுக்கு அவசியமான உலை எண்ணெய்யே கையிருப்பில் உள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவற்றுக்காக உலை எண்ணெய்யைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments