நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின்எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.