Ticker

6/recent/ticker-posts

சர்வகட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயார் – அனுர..


 எதிர்கால அதிகார திட்டங்கள் அல்லாத இருவரைஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், எதிர்வரும் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி சர்வகட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்கவும் தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


காலி முகத்திடல் செயற்பாட்டாளர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் நேற்று (17) பத்தரமுல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறுதி நேரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை மீளப்பெறுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

“வேட்புமனுவை மீளப்பெற நாங்கள் தயாராக இருக்கிறோம். அது புதன்கிழமை வரை செல்லுபடியாகும். ஆனால் எங்கள் முன்மொழிவுகள் செயல்படுத்தப்படாவிட்டால், நான் போட்டியிடுவேன். அது திரும்பப் பெறப்படாது” என அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments