ஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா தொடர்பில் இன்று நீதிமன்றிற்கு அறியப்படுத்தப்படவுள்ளது.
நேற்று முன்தினம் நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியனவற்றிற்குள் பிரவேசித்திருந்தனர்.
இந்தநிலையில், ஜனாதிபதி மாளிகையில் இருந்த ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை சிலர் மீட்டதுடன், அதனை உரிய வகையில் கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் கையளித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த பணத்தை இன்றைய தினம் நீதிமன்றில் பாரப்படுத்துவதற்கும் அது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments