சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி (Hideaki Mizukoshi) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை தொடர்ந்து பேணுவதாகவும் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்தார்.
இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி தூதுவருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.
0 Comments