இலங்கையும் குரங்கு அம்மை தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்

குரங்கு அம்மை உலக சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று (23) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இதனை அறிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, உலகில் 75 நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6