குருநாகல், யக்கஹபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள்நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவதானித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியின் தலைமையில் ஐவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 Comments