Ticker

6/recent/ticker-posts

பள்ளி சூறை: பேருந்துகளுக்கு தீ வைப்பு ; கள்ளக்குறிச்சியில். வன்முறையில் ஈடுபட்டது யார் ? வீடியோ





கனியாமூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள், பள்ளி பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர். இதற்கிடையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சிலர் மாணவர் அமைப்பினர் என கூறுகின்றனர். சிலர் ஊர் மக்கள் என்றும் , சிலர் ஒரு சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தூண்டி விட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி இன்று (ஜூலை 17) மாணவர்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறி, போலீசார் மீது கல்வீசி தாக்கினர். மேலும் போலீஸ் வாகனத்தையும் தாக்கி தீ வைத்து கொளுத்தினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்க்காரர்கள், பள்ளி கட்டடத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.





அங்கு நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பள்ளி பேருந்துகளுக்கும், பள்ளிக்கு சொந்தமான டிராக்டர், புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர். பள்ளி அறைகள் மற்றும் சமையல் கூடத்திலும் தீ வைக்கப்பட்டது. இதில் சமையல் கூடத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் அங்கிருந்தவர்கள், பதறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர். போராட்டத்தை கட்டுப்படுத்த போதிய அளவு போலீசார் இல்லாததால், 3 மாவட்டத்தில் இருந்து கூடுதல் போலீசார் கனியாமூர் விரைகின்றனர்.



திட்டமிட்டு வந்த கூட்டம்


வன்முறை தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி சார்பில் புலன் விசாரணை நடந்து வருகிறது. பள்ளி மீது எந்த தவறும் இல்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அந்த சூழலில் இந்த போராட்டத்தில் போலீசார் காயமடைந்துள்ளனர். பள்ளியும் சேதமாகியுள்ளது. போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அமைதிக்காக்க வேண்டும். போராட்டம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


போலீசார் தாமதம்


வன்முறை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் சூழலில் போதுமான போலீசார் இல்லாதது தெரிந்தும், கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. 3 மாவட்டத்தில் இருந்து போலீசார் விரைவதாக கூறிவந்தாலும், வருகை தாமதத்தால் கலவரம் பெரிதளவில் உருவானது. போலீசார் உடனடியாக விரைந்திருந்தால், கலவரத்தை ஓரளவு கட்டுப்படுத்தி சேதத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments