தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக தங்க நகை கொள்வனவு செய்யும் நிலையங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஆபரண வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஏ.விஜயகுமார் கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

புதிய தங்க நகைகள் கொள்வனவு வருபவர்களின் எண்ணிக்கை 5% – 10% குறைந்துள்ளது.

தற்போது கொழும்பு செட்டியார் தெருவில் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை சுமார் 185,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.