நான் ராஜபக்ஷாக்களின் நண்பன் அல்ல. மக்களின் நண்பனாவேன். மக்கள் கோரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன்.

அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எனக்கு ஒத்துழைக்குமாறு அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

நேற்று (20) புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள கங்கார விகாரையில் மதவழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.