பொரளை - காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர்

கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வாகனத்தில் இருந்து பெற்றோல் திருடியமை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வாகனத்தின் உரிமையாளரை மற்றுமொரு நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை காசல் வீதியில் வசித்துவந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர் அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.