ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

Jindayris பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐ.எஸ். தலைவர் மகெர் அல் அகல் கொல்லப்பட்டதாக பெண்டகன் மத்திய கமாண்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் மகெர் அல் அகல் கொல்லப்பட்டதை உறுதி செய்தது. Levant பிராந்தியத்தின் ஆளுநராக மகெர் அல் அகல் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது