இரவு 2 மணியளவில் வீடொன்றுக்குள் நுழைந்த நபர் அடித்துக் கொலை...!
பலாங்கொட கிரிகல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அதிகாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அவர் பலாங்கொடை-முஹூணமலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து, குறித்த நபரை அம்பியூலன்ஸ் ஊடாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வரும் கணவன், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் ஆகியோரை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
0 Comments