முஸ்­லிம்­களின் ஜனாஸாக்களை ஏன் எரிக்கிறீர்கள் என கோத்­தா­பயவிடம் கேட்டபோது உனது வேலையை பார்  என்று சொன்னவரை மக்கள் வேலையை விட்டே விரட்டினார்கள் - பேரா­சி­ரி­யர் ஹேம­தி­லக .

கொவிட் தொற்­றினால் மர­ணித்த முஸ்­லிம்­களின் சட­லங்­களை எரிப்­பது ஏன் என நான் கேள்­வி­யெ­ழுப்­பிய போது ‘உனது வேலையைப் பார்’ என கோத்­தா­பய ராஜ­பக்ச கூறினார் என அவ­ரது நண்­ப­ரான டாக்டர் கங்கா ஹேம­தி­லக தெரி­வித்­துள்ளார். தற்­போது அமெ­ரிக்­காவில் வசித்து வரும் பிர­பல வைத்­தியப் பேரா­சி­ரி­ய­ரான கங்கா ஹேம­தி­லக, தனது முக­நூலில் வெளி­யிட்­டுள்ள பதி­வொன்­றி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.


கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக்­சவின் வெற்­றிக்­காக உழைத்த வியத்­மக அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரான இவர் தனது பதிவில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

“நான் கோத்­த­பா­ய­வுக்கு கடந்த தேர்­தலில் இத­ய­பூர்­வ­மாக ஆத­ர­வ­ளித்­த­போது இவ்­வாறு நடக்கும் என்று ஒரு­போதும் எதிர்­பார்க்­க­வில்லை. அவர் ஏனைய திருட்டு ராஜ­பக்­சக்­களைப் போலல்­லாது ‘வியத்­மக’ நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்று மாற்­றத்தைக் கொண்டு வருவேன் என உறு­தி­ய­ளித்தார்.

நான் வியத்­ம­கவின் ஆரம்ப உறுப்­பி­னர்­களில் ஒருவன். கோத்­த­பா­யவின் தனிப்­பட்ட வேண்­டு­கோ­ளின்­பே­ரி­லேயே அந்த அமைப்பில் இணைந்தேன். வியத்­மக ஒவ்­வொரு அமைச்­சுக்கும் திணைக்­க­ளத்­துக்­கு­மென தனித்­த­னி­யான திட்­டங்­களை வகுத்­தி­ருந்­தது, அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்தால் எதிர்­பார்த்த மாற்­றத்தை நாம் கண்­டி­ருக்­கலாம்.


எனினும் அவர் வெற்றி பெற்ற முதல் நாளி­லேயே எம்­மை­யெல்லாம் அவ­ரது நெருக்­க­மான வட்­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றினார். பசில் ராஜ­பக்­சவை மாத்­திரம் தனது ஆலோ­ச­க­ராக வைத்துக் கொண்டார். அவ­ரது தீர்­மா­னங்­க­ளுக்கு, வெட்­க­மில்­லாது ஆமாம் சாமி போட்ட சில வியத்­மக உறுப்­பி­னர்கள் மாத்­திரம் அவ­ருடன் இருந்­தனர். ஏனையோர் தூர­மா­கி­விட்­டனர். பின்னர் பி.பி. ஜய­சுந்­தர இணைந்து, கோட்­டாவின் வீழ்ச்­சிக்கு வழி­வ­குத்தார். 

தான் பௌத்த சிங்­கள வாக்­கு­களால் மாத்­தி­ரமே தெரிவு செய்­யப்­பட்­ட­தாக முதல் நாளி­லேயே பிர­க­டனம் செய்­த­துடன், அன்று முதல் ஓர் இன­வாத, மத வெறி­ய­ராக உரு­வெ­டுத்தார். சிந்­திக்­கவே முடி­யாத பல முட்­டாள்­த­ன­மான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றினார். இர­சா­யன உரத்தை தடை செய்­து­விட்டு ஒரே இர­வி­லேயே இலங்கை 100 வீத இயற்கை விவ­சாய நாடு என்று பிர­க­டப்­ப­டுத்­தினார். கொவிட்­டினால், உயி­ரி­ழந்த குழந்­தைகள் உள்­ளிட்ட அப்­பாவி முஸ்­லிம்­களை பல­வந்­த­மாக எரிக்கும் தீர்­மா­னத்தை அமுல்­ப­டுத்­தினார். 

இந்த மத வெறி­மிக்க விஞ்­ஞா­ன­ பூர்­வ­மற்ற தீர்மானம் குறித்து நான் கேள்வியெழுப்பியபோது, ‘நீ உனது வேலையைப் பார்’ என எனக்கு பதிலளித்தார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்று கேட்ட உங்களுக்கு கிடைத்த பதில் இதுதான்” என்றும் டாக்டர் கங்கா ஹேமதிலக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.-