ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செய்திகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மட்டுமே வெளியிடுவார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி பிரதமருக்கு தெரியப்படுத்தியதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.