அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட விசா கையளிக்கப்பட்டுள்ளமையானது, இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்தவும் இலகுவாக வர்த்தக நடவடிக்கைககளை மேற்கொள்ளவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வெளிநாடு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் வீசாக்களின் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அண்மையில் அமைச்சர் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவித்திருந்தார்.

அத்தோடு தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லவிருப்போரிடம் , உரிய ஆவணங்கள் அனைத்தும் காணப்படுமாயின் அவர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என்றும் , ஒருநாளை சேவையில் இவற்றை வழங்குவதற்கு பிரத்தியேக கரும பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று (02) சனிக்கிழமை இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட வீசா , அமைச்சர் தம்மிக பெரேராவினால் கையளிக்கப்பட்டது.

இதற்கு வரவேற்பு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.