மைக்ரோசொப்ட் நிறுவனம் 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அந்நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசொப்ட் தரப்பிலிருந்து “எல்லா நிறுவனங்களைப் போல நாங்களும் வழக்கமான அடிப்படையில் வணிகம் செய்கிறோம். அதன் காரணமாக, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இங்கு பணியாற்றும் 1,81,000 ஊழியர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும், சில திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதால் அடுத்த ஆண்டு அதிகமான புதிய ஊழியர்களை பணியமர்த்துவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments