நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
நிலக்கரி கொள்வனவு செய்வதற்காக 320 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு சில தினங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில் அந்த கோரிக்கை திறைசேரியினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் உரிய நிலக்கரி இருப்புக்களை கொள்வனவு செய்ய முடியாதுபோனால், நாளாந்த மின்வெட்டை 14 மணிநேரமாக அதிகரிக்க வேண்டி ஏற்படும் இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அதே நேரம் குறித்த கடன் கடிதங்களை திறக்க பணம் வழங்கினால் நாட்டிற்கு எரிபொருள் இறக்குமதி செய்ய பணம் வழங்க முடியாமல் போகும் என திறைசேரி இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments