Ticker

6/recent/ticker-posts

நாளை (ஜுலை-07) முதல் கத்தாரில் மூடிய பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும்…


 நாளை (ஜுலை-07) முதல் கத்தாரில் மூடிய  பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரின் பிரதமரும், உள்துறை அமைச்சருமான HE Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al-Thani  அவர்களின் தலைமையின் இன்று (06.07.2022) இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின் படி எதிர்வரும் 07.07.2022 (நாளை) திகதி முதல் மூடிய பொது இடங்களில் மாஸ்க்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கத்தாரில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி புள்ளி விபரங்களின் அடிப்படையில் கடந்த 2022 மே மாதம் 18ம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவும் மாற்றப்பட்டு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் மீள கடைபிடிக்கப்படவுள்ளன.

அந்த வரிசையில் நாளை முதல் மூடிய  பொது  இடங்களில் கத்தார் பிரஜைகள், வெளிநாட்டவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகிய அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments