இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த விசா கால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறை ஜூலை 4ஆம் திகதி அமுலுக்கு வரும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.