கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் வளர்ப்பு யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி, முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே மூன்று உயிர்களைப் பறித்ததாகக் கூறப்படும் 'முத்து' என்ற யானையே இத்தாக்குதலை நடத்தியுள்ளது. வழக்கம்போல பாசத்துடன் யானைக்கு ரொட்டி வழங்குவதற்காக அதன் உரிமையாளரின் மாமா சென்றிருந்த போதே, யானை அவரை திடீரெனத் தாக்கியுள்ளது.
இந்த எதிர்பாராத தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments