-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஸ்வி நகர் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் ரிஸ்வி நகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய முகம்மது அன்ஸார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். புகார்தீன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, உடல் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments