பஹலஸ்பத்துவ அரம்பகந்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பஹலஸ்பத்துவ பொலிசார் தெரிவிக்கின்றனர். இன்று (2026.06.07) அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் 49 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவராவார். உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வீட்டில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, மனைவியால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த இடம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஹலஸ்பத்துவ பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments