இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்டவர் மௌலவி அல்ல என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இறக்காமம் கிளை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இறக்காமம் கிளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்டவர் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் அவர் ‘மௌலவி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானதாகும்.
குறித்த சந்தேகநபர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் பட்டம் பெற்ற அவரு மௌலவி அல்ல.
மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தாய்ச் சபையிலோ அல்லது இறக்காமம் கிளையிலோ குறித்த சந்தேகநபர் அங்கத்துவத்தினை பெறவில்லை எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இறக்காமம் கிளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments