Ticker

6/recent/ticker-posts

இறக்காமத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: இருவர் கைது.!!!


அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இறக்காமம் வாங்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 08ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டு எதிர்வரும் 03ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் 21 வயதுடைய இளைஞர் சம்பவத்திற்குப் பின்னர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், அவர் கடந்த 20ஆம் திகதி சட்டத்தரணி ஒருவரின் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.


சரணடைந்த பிரதான சந்தேகநபரும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments